வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள், 12 முதல் 15 வயது மாணவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கொவிட்-19 தடுப்பூசிக்கான கடிதங்கள் மற்றும் ஒப்புதல் படிவங்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை தகுதியான சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள், ஆரோக்கியமான 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு ஒரு தடுப்பூசி மருந்தை வழங்க பரிந்துரை செய்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ஒவ்வொரு நாடும் எடுக்கும் அணுகுமுறை வேறுபடுகிறது.
வேல்ஸ் அரசாங்கம், பாடசாலையின் அரையாண்டு முடிவதற்குள் அந்த வயது வரம்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரு டோஸ் வழங்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது,
வேல்ஸில் உள்ள 140,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி பெறுவார்கள்.