30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கொரோனா தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் இணைந்து 30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கான கொரோனா நோய் எதிர்ப்பு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
எனவே வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய் கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிவரை பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை பெறுக்கொள்வதற்கும் பதிவுகளை மேற்கொள்வதற்கும் கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி-024 222 4674
மின்னஞ்சல்- umo@vau.ac.lk