நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 772 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 31 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 435 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 78 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்று முந்தினம் கொரோனா தொற்றால் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 19 பெண்களும் 25 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.