நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்த அரிசி சதோச மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.