இங்கிலாந்து உட்பட பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
கொரோனா தொற்றுடன் வாழும் உத்தியைத் தொடர வேண்டிய நேரம் இது என பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
ஜேர்மனி மற்றும் புருனே ஆகிய நாடுகளை சேர்ந்த தடுப்பூசி செலுத்தியவர்களை அனுமதிக்கும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதை அடுத்து இந்த திட்டம் மேலும் ஒன்பது நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தன.
இதனால் கொரோனா தொடர்பான இறப்புகள் குறைவடைந்தபோதும் முடக்கத்தினால் வணிக மற்றும் விமான கேந்திர நிலையமான தெற்காசிய நாடான சிங்கப்பூரின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.