கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 621ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்து 70ஆக பதிவாகியுள்ளது.
மேலும் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.