ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத மேலும் பல படுகொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இராணுவ தளபதி நரவானே பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக எல்லையின் முன்களப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.