கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.
அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலை தற்போது 900 ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம்பு ஒரு கிலோகிராம் ஆயிரத்து 400 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.
அத்துடன், ஒரு கிலோகிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாயாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.