கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 8 ஆயிரத்து 790 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்து, 5 இலட்சத்து 2 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றினால் இதுவரையில் 13 ஆயிரத்து 543 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.