தமிழகத்தில் 6ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலாவது முகாமில் 28 இலட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது முகாமில் 16 இலட்சத்து 43 ஆயிரம் பேரும் 3ஆவது முகாமில் 24 இலட்சத்து 85 ஆயிரம் பேரும் 4ஆவது முகாமில் 17 இலட்சத்து 19 ஆயிரம் பேரும் 5ஆவது முகாமில் 22 இலட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 இலட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 6ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மெகா தடுப்பூசி முகாமுக்காக கையிருப்பில் இருந்த 66 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள், மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.