ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் மூன்று இலட்சத்து 244பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்று இலட்சத்து 28ஆயிரத்து 729பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்காயிரத்து 723பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 762பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 93பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.