நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குகின்றனர்.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.