வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா வரும்போதோ அல்லது வந்ததற்கு பின்னரோ கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உடன் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமாயின் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும், அவ்வாறு இனங்காணப்படும் பட்சத்தில் தனிமைப்படுத்துவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.