அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனின் பதவி, தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்தை பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார் மற்றும் முதல் கறுப்பின மற்றும் தெற்காசிய அமெரிக்கர் ஆவார்.
ஜோ பைடனின் வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால், அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி 57 வயதான கமலா ஹாரிஸ் 85 நிமிடங்கள் ஜனாதிபதி பொறுப்பினை பொறுப்பேற்று நடத்தினார்.
பைடனின் மருத்துவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டார், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது கடமைகளைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.
ஜனாதிபதியின் 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.