சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து கடந்த மாதம் 25ஆம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயற்பட்டு வருகிறார்.
இதனையடுத்து, இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சூடான் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.