நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 376 பேர் குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.