ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான எனர்ஜி குளோபல் இன்டர்நேஷனல் பாகிஸ்தானின் மத்திய வங்கி மற்றும் தனியார் வங்கியொன்றுக்கு எதிராக சுமார் 74பில்லியன் ரூபா நட்டஈடு வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஊடகத்தின் கூற்றுப்படி, எனர்ஜி குளோபல் இன்டர்நேஷனல் நிறுவனமானது டிசம்பர் 2012 இல் வங்கிக் கணக்குகளை முடக்கிய மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயக் கணக்கை சட்டவிரோதமான முறையில் மாற்றிய நடவடிக்கையின் காரணமாக மத்திய வங்கிக்கு எதிராக நஷ்டஈடு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது
சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்தியவங்கியுடன் தனியார் வணிக வங்கியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையை குறித்த இருவங்கிகளின் பிரதிநிதிகளையும் அடுத்த ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனர்ஜி குளோபல் இன்டர்நேஷனல் நிறுவனமானது அமெரிக்காவை மையமாகக் கொண்டது என்பதன் அடிப்படையில் டிசம்பர் 2012 இல், குறித்த மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய வங்கி அந்நிறுவனத்தின் கணக்குகளை மத்திய வங்கி முடக்கியிருந்தது.
மத்தியவங்கியின் மேற்படியான நடவடிக்கைகள் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு முரணானது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு முன்பு முன்னறிவித்தல் ஒருபோதும் விட்டிருக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், எனர்ஜி குளோபல் நிறுவனம் தனது வங்கிக் கணக்குள் முடக்கப்பட்ட நிலையில் நிதிப்பரிமாற்ற நடவடிக்கைகளை மத்திய வங்கி ரூபாவில் மேற்கொண்டமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமன்றி எனர்ஜி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அனுப்பிய கடித்தில் தமது வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளiமாயால் நிலுவையாக இருக்கும் தொகைகளை விடுவிக்குமாறும் குறித்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.