யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முன்தினம் முதல் பெய்த மழை மற்றும் அதிக காற்று காரணமாக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டனர்