இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 868 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 77 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 133 பேர், இந்தியாவின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 67 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.