தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆசிய நாடான ஹொங்கொங்கிலும் கண்டறியப்பட்டுள்ளது.
பி.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, செக் லாப் கோக்கில் உள்ள ரீகல் எயார்போர்ட் ஹோட்டலில் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்ட இருவரிடம் இருந்து கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரால் புதிய மாறுபாடு கொண்டுவரப்பட்டதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
36 வயதான இந்த நோயாளி, ஹோட்டலில் பக்கத்து அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கு வைரஸைக் கடத்தியதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
62 வயதான இரண்டாவது நபர், கனடாவில் இருந்து வந்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.