நாட்டில் மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் மூன்றாம் டோஸாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 81 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நேற்றைய தினம் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 972 பேருக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3,367 பேருக்கும் செலுத்தப்பட்டது.
அதேபோல ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 05 பேருக்கும் செலுத்தப்பட்டது.
மேலும் ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1,038 பேருக்கும் ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 584 பேருக்கும் ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் 60,490 பேருக்கும் செலுத்தப்பட்டது.
அதெநேரம், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 11 பேருக்கும் செலுத்தப்பட்டது.