ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு மாகாணத்திற்கு பயணம் செய்யவுள்ளது.
அதன்படி, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவே இவ்வாறு கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, முதலாவது மக்கள் சந்திப்பு வடக்கில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, நாம் ஒன்றுபடுவதை எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை என செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.