கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெளிவான கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸின் எந்தத் திரிபு கண்டறியப்பட்டாலும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது முக்கியமானதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.