பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஏழாவது அத்தியாயம், தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, ஏழாவது அத்தியாயம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.
அதேபோல, வீரர்களுக்கான வரைவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12ஆம் திகதி) திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச்- ஏப்ரல் மாதங்களில் அவுஸ்ரேலியாவின் வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு இடமளிக்க லீக் சுமார் ஒரு மாதம் முன்னோக்கி நடத்தப்படுகின்றது.
தொடரின் முதல் 15 போட்டிகள் ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி 9ஆம் திகதி வரை கராச்சியிலும், கடைசி 19ஆம் திகதி பெப்ரவரி 27ஆம் திகதி லாகூரிலும் நடைபெறும்.