டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், அரையிறுதி சுற்றுக்கு செர்பியா மற்றும் ரஷ்ய அணிகள் முன்னேறியுள்ளன.
மட்ரிட்டில் நடைபெற்று வரும் இத்தொடரின் காலிறுதிப் போட்டியில், ரஷ்யா மற்று சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், இதில் ரஷ்ய வீரர் மெட்வேடவ் 6-4, 6-4 என்ற செட் கணக்குகளில் மைக்கேல் யெமரையும், ஆன்ட்ரெ ருப்லேவ் 6-2, 5-7, 7-6 என எலியாஸ் எமரையும் வென்றனர்.
இதன்படி அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய அணி, அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியை எதிர்கொள்கின்றது.
மற்றொரு போட்டியில் செர்பியா அணி கஜகஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தான் வீரர் பப்லிக்கை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியொன்றில் கஜகஸ்தான் வீரர் குகுஷ்கின் 7-6, 4-6, 7-6 என செர்பியாவின் மியோமரை வென்றார்.
இரட்டையர் பிரிவிலும் செர்பிய அணி 6-2, 2-6, 6-3 என கஜகஸ்தானை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதன்படி அரையிறுதிக்கு முன்னேறிய செர்பியா அணி, அரையிறுதிப் போட்டியில் செர்பியா அணியை எதிர்கொள்கின்றது.