இத்தாலியில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
‘சுப்பர் கிரீன் பாஸ்’ எனும் கொரோனா கால அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், உட்புற உணவகங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படுகின்றது.
எதிர்மறை சோதனை முடிவுடன் பெறக்கூடிய சாதாரண கிரீன் பாஸ், உள்ளூர் போக்குவரத்து மற்றும் ஹோட்டல்களின் பயன்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போட வேண்டும், ஆனால், டிசம்பர் 15ஆம் திகதி முதல், இந்த விதியில் அனைத்து பாடசாலை ஊழியர்கள், பொலிஸ்துறை மற்றும் இராணுவமும் அடங்கும்.
தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கிடைக்கும் பூஸ்டர் அளவுகள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கிடைக்கும்.
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இத்தாலி மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.