சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும்போது, அதன் மேல் பகுதியிலுள்ள வால்வு ஐந்தாண்டுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும் என எரிசக்தி நிபுணர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்கள் ஐந்தாண்டுகளுக்கு உட்பட்டதா என ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டரிலுள்ள திகதியை கவனத்திற்கொள்ள வேண்டியது பொதுமக்களுக்கு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.