சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 20 மற்றும் 22ஆம் திகதிகளில் இம்ரான்கான் அரசாங்கம் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுள்ளார்.
பின்னர் 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொது முகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.
இதன்போது, தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்டுகிறது.
இந்நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.