அரசாங்கம் நாட்டையும் மக்களையும் ஏமாற்ற முயல்கிறதா என்பது தொடர்பில் பாரிய கவலைகள் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எஹலியகொடவில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிர்வாகம் நாட்டை தவறாக வழிநடத்துகின்றதா என கேள்வியும் எழுப்பினார்.
மேலும் நேர்மையான நோக்கத்துடன்தான் அனைத்து பதவிகளையும் தான் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் தலைவர்கள் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கெவிந்து குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடும் உலகமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றது. இந்நிலையில் குறித்த சிரமங்களை எதிர்கொள்ள ஒரே வழி, பொதுமக்களுடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுவதுதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.