இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 95 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 247 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.