ஓமிக்ரோன் மாறுபாட்டின் வருகையைத் தொடர்ந்து, ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஈகுவடார் மாறியுள்ளது.
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய தடுப்பூசி ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பொருந்தும் என சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈகுவடாரின் 17.7 மில்லியன் மக்கள் தொகையில் 69 சதவீதம் பேர் இன்றுவரை இரண்டு தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளனர். மேலும் 900,000பேர் மூன்றாவது, பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.
தடுப்பூசியைப் பெறாத மருத்துவக் காரணங்களைக் கொண்டவர்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு ஈகுவடார் அரசியலமைப்பில் நிறுவப்பட்டது. இதில் சுகாதார உரிமையை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்.
ஒமிக்ரோன் மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு புதிய தொற்றுகளின் அதிகரிப்பை எதிர்த்துப் போராட, ஈகுவடார் மக்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மற்றும் பிற பொது இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி பதிவை வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.