பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு சந்தையை போட்டித்தன்மை மிகுந்ததாக மாற்றுவதை மாத்திரமே அரசாங்கத்தினால் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் பயன்தரக்கூடிய காய்கறிகளை உருவாக்கும் திட்டம் உள்ளது இதன் மூலம் ஏப்ரல் புத்தாண்டிற்கு முன்னதாக பயன் பெறும் நோக்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.