வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கை பிரஜை அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம் செய்துகொள்ள வேண்டுமாயின் இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.