இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
சூழலுக்கு ஏற்றவாறு நான்காவது பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஃபைஸர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய முதல் வரிசை நாடுகளில் இஸ்ரேலும் இருந்தது.
கடந்த கோடை காலம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் தொடங்கியது. முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இஸ்ரேல் வியாழன் முதல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.