பழங்குடியினரின் இறையாண்மைக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற கட்டம் எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது.
எனினும், இந்த சம்பத்தின் போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், தீ அணைக்கப்படுவதற்கு முன்னர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன் கதவுகள் தீக்கிரையாகின.
அந்த இடத்தில் பதினைந்து நாட்களாக நடந்த எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது.
அவுஸ்ரேலியாவில் இந்த அளவிலான எதிர்ப்பு வன்முறைகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் தொற்றுநோய்களின் போது ஆர்ப்பாட்டங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன.
பிரதமர் ஸ்கொட் மோரிஸன், வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார். அவுஸ்திரேலியா இப்படிச் செயற்படுவதில்லை’ என கூறினார்.