தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி, 19:00 மணிக்குப் பிறகு குரோய்டனில் உள்ள ஆஷ்பர்டன் பூங்காவிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக மெட் பொலிஸ் கூறியது.
அவசர மருத்துவ ஊர்தி சேவை வருவதற்குள் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மரணம் 2021இல் லண்டனில் ஒரு இளைஞனின் 29ஆவது கொலையாகும். இது 2008ஆம் ஆண்டின் தலைநகரில் பதின்ம வயதினரின் கொலைகளின் உச்ச ஆண்டை சமன் செய்கிறது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் முறையான அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனை நடைபெறும்.
இதுகுறித்து மெட் பொலிஸ் கமாண்டர் அலெக்ஸ் முர்ரே கூறுகையில், இந்த ஆண்டு நடந்த ஒவ்வொரு கொலைகளாலும் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்’ என கூறினார்.