அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.