பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபாய் என்ற அடிப்படையில் 40 ரூபாய் நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேநேரம், அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.