இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராகவும், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.