• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/08
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
77 0
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகள் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி சமய வழிபாடுகள் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளன.

பௌத்த மத நிகழ்வு நாரஹேன்பிட்டியிலுள்ள அபேயராம விஹாரையில் நடைபெறவுள்ளதுடன் முக்கிய அமைச்சர்கள் பலரும் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்து சமய மத நிகழ்வுகள் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் சமய மத வழிபாடுகள் கொழும்பு 12 பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளதுடன் நீதியமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கத்தோலிக்க சமய மத வழிபாடு புஞ்சிபொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அநுரத்த, திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிறிஸ்தவ வழிபாட்டு நிகழ்வு கொழும்பு 02 இல் உள்ள இரட்சணிய சேனை ஆலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடைபெறவுள்ளன. நிகழ்வு நடைபெறும் சுதந்திர சதுக்கத்தையொட்டிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதுடன் நிகழ்வில் பங்குபற்றுவோருக்கான பொது வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகளின் முக்கிய அம்சமான முப் படைவீரர்களின் அணிவகுப்பில் இம்முறை 6,783 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் ஒத்திகை நேரம் தவிர்ந்த ஏனைய காலங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தேசிய கீதம் இசைப்பதற்காக 45 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்காக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணிக்கு முன்பதாக அனைவரும் ஆசனத்தில் அமரவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சுதந்தர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த வருடங்களைப் போன்று வீதியில் இரு மருங்குகளிலும் இருந்து நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related

Tags: அமைச்சர்கள்இலங்கைஎன்.எச்.எம்.சித்ரானந்தகட்சித் தலைவர்கள்சுதந்தர தின நிகழ்வுமுக்கியஸ்தர்கள்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

Next Post

யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-21
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
கிழக்கு மாகாணம்

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
Next Post
யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது!

யாழில். "எளிமைமிகு பரிபாலக ஆளுமை" என்ற நூல் வெளியிடப்பட்டது!

21 ஆம் திகதிமுதல் வெளி மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் – அ.மரின்குமார்

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம் - அ.மரின்குமார்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

0
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.