இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 58 இலட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும் நேற்று மாத்திரம் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 8 இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.