டொலர் நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அரசாங்கம் கூறியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறான நெருக்கடி காணப்பட்டபோதும் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் நேற்று செலுத்தப்பட்டது என தெரிவித்தார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் மூலம் நாட்டிற்கு பாரிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்ததாகவும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.