பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அண்மையில் அறிவித்தனர்.
அதன்படி, மாலை 4.45 மணியளவில் தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வலதுபுறம் உள்ள சிலைக்கு அருகில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.















