டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று(வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி 170 இற்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய ஓசியானியாவிலுள்ள ஒரு சிறிய நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
இந்த வெடிப்பினால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, ஹவாய் மற்றும் அலாஸ்காவின் பெரும்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது 20 கிலோமீட்டர் உயரத்திற்கு பெரிய சாம்பல் மேகங்களை ஏற்படுத்தியதுடன், தொலைதூர பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை பாதித்திருந்தது.
அதேநேரம் டோங்கோவில் சுனாமி அலைகளும் ஏற்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.