விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளரான தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம், மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம், சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் உள்ளிட்ட பல சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.