இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்று மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 இலட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 15.88 வீதமாக உயர்ந்துள்ளதுடன், நாடு முழுவதும் 21 இலட்சத்து 5 ஆயிரத்து 611 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.