டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் காணப்படுகின்றது. ஆனால் தற்போது 30 பேர் மாத்திரமே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஆறு பேரை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தெலுங்கான உயர் நீதிமன்றத்திற்கு 12 பேரையும், பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு ஒருவரையும், நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.