நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதோடு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் கொரோனா தொற்று சவாலை சமாளிக்க முடியும் என அவர் கூறினார்.