தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியை கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க இராஜினாமா செய்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், இராஜினாமா கடிதத்தை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் அவர் கையளித்துள்ளார்.