இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.